//nossairt.net/4/5556455 ;

உருகாதோ நெஞ்சம் (Urugatho nenjam) Keyboard notes and Chords

 Sponsored image 

Lyrics and Sung by: Sirkali Yesuprakasam

For Video Lesson :----------->Click Here

Lyrics:

உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
உனக்காக பலியாக வந்தார் – கலங்காதோ
கண்கள் வழியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியைக் கண்டு

நடமாட முடியா தடுமாறிக் கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்று
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாடச் செய்த தாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்
கதறிய மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கருணையாய் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அது தான் சிலுவையின் பரிசே

இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிகின்ற ஆத்மா
பாவத்தை நீக்கி பாவியை மீட்டு
இரட்சிப்பின் வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

Chord sheet:

 
Keyboard notes:



0 comments:

Post a Comment