Lyrics : NOEL JAYAKUMAR BREIN BRANHARM MALCOLM MARSHALL RAJ
For video Lesson of Keyboard notes and chords:-------------->Click Here
Lyrics:
கொட்டும் பனியில் குளிர்நிலா
மண்ணில் வந்த பாலகனே
உனை தொட்டு தழுவி அணைக்க
எந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2
அன்னை மடி மீது நீயும் தவழ
கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர்
மாட்டுத் தொழுவமாய் எந்தன்
உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார்
எந்தன் நண்பனாய் அன்பனாய்
நீயும் மாறிட
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மை போற்றுவேன் - 2
சரணம் :
வானின் நீளம் ஓடும் நீரும்
உம் அன்பை அறிந்ததே
பாவியான எந்தன் உள்ளம்
உம்மை மறந்ததே
சாதி மதம் தேடல் இங்கே
அன்பை அழித்ததே
உண்மையான அன்பிற்காக
எங்கியே நின்றதே
ஒரு தாயை தேடும் பிள்ளை போல
அன்பை தேடி நின்றேன்
இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே
உம்மை கண்டுக்கொண்டேன்
இருள் யாவும் மறைந்திடும்
ஒளி எங்கும் பரவிடும்
இதை யாவரும் காணவே
உம் வருகை உணர்த்திடும்
என்னை வீழ்த்திட தாழ்த்திட
யார் யார் நினைப்பினும்
உந்தன் பார்வையில் பாதையில்
என் தேடல் வேண்டுமே - 2
Keyboard chords
Keyboard notes:


0 comments:
Post a Comment